‘ஒவ்வொரு ஊரிலும் இசை நிகழ்ச்சி’ - இளையராஜா தகவல்

‘ஒவ்வொரு ஊரிலும் இசை நிகழ்ச்சி’ - இளையராஜா தகவல்
Updated on
1 min read

திரைப்படங்களுக்கு இசை அமைத்து வரும் இளையராஜா, வெளிநாடுகள் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலியில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சி, வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள அவர், ஒவ்வொரு ஊரிலும் தனது இசை நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊரிலும் விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?” என்று கேட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in