தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பிப்.22-ல் ரிலீஸ்!

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பிப்.22-ல் ரிலீஸ்!
Updated on
1 min read

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் பிப்ரவரி 22-ல் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள புதிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தை பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடவே முதலில் முடிவெடுக்கப்பட்டு, அதுகுறித்த அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில், இப்படம் பிப்ரவரி 22-ல் வெளியாகும் என்று இப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் ‘விடாமுயற்சி’ பிப்ரவரி 6-ல் வெளியாவதால், இப்படம் சற்றே தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது சிங்கிள் ‘காதல் ஃபெயில்’ தனுஷ் ஸ்டைலில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படமான ‘இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in