இயக்குநர் பாலாவுக்கு அருண் விஜய் நன்றி

இயக்குநர் பாலாவுக்கு அருண் விஜய் நன்றி
Updated on
1 min read

‘வணங்கான்’ வாய்ப்புக்காக இயக்குநர் பாலாவுக்கு அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான படம் ‘வணங்கான்’. இப்படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாக எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக பாலா இயக்கத்தில் அருண் விஜய்க்கு நடித்துள்ளார். இந்நிலையில் பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அருண் விஜய்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் “என் இயக்குநர் பாலா சாருக்கு என் மனமார்ந்த நன்றி, ‘வணங்கான்’ படத்தில் கோட்டியாக வாழ அனுமதித்ததற்காக. கோட்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் என் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. ஒரு வார்த்தையும் பேசாமல் உலகம் முழுவதும் உள்ளவர்களின் மனங்களை வென்றிருப்பது அனைத்தும் உங்களால் தான்!

நான் என்ன செய்யக் கூடியவன் என்பதை நீங்கள் எனக்கு உணர்த்தினீர்கள். இதற்காக நான் உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் மனமார்ந்த நன்றி.” என்று தெரிவித்துள்ளார் அருண் விஜய். ‘வணங்கான்’ படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக ‘ரெட்ட தல’ படம் வெளியாகவுள்ளது. இதன் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in