சென்னையில் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி

சென்னையில் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி
Updated on
1 min read

நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி, ‘பிரபுதேவா’ஸ் வைப் (Prabhudeva's Vibe) என்ற தலைப்பில் பிப். 23-ம் தேதி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதை அருண் ஈவன்ட்ஸ் நிறுவனம் நடத்துகிறது. நடிகரும் இயக்குநருமான ஹரிகுமார் இந்த நிகழ்ச்சியை இயக்குகிறார்.

இதுபற்றி பிரபுதேவா கூறும்போது, “இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற ஐடியா எனக்கு இல்லை. இதற்கு முதுகெலும்பாக இருந்தவர் நடன இயக்குநர் ஹரிகுமார். ரசிகர்கள் முன்னால் ஒழுங்காக ஆட வேண்டும் என்ற பயம் இருக்கிறது. சினிமாவில் கட் செய்து, கட் செய்து ஆடுவோம். நிஜத்தில் அப்படி முடியாது. அதற்காகப் பயிற்சி எடுத்து வருகிறேன். என்னால் முடிந்த 200 சதவிகித உழைப்பைக் கொடுக்க வேண்டும். இது பெரிய சவால்தான்” என்றார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in