நடிகர் அஜித்துக்கு ரஜினி, கமல் வாழ்த்து

நடிகர் அஜித்துக்கு ரஜினி, கமல் வாழ்த்து
Updated on
1 min read

துபாயில் நடந்த 24 ஹெச் கார் ரேஸில், 991 பிரிவில் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்' அணி 3-வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், "அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதனை செய்துள்ளீர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “முதன் முதலாகக் கலந்துகொண்ட போட்டியிலேயே சாதனை படைத்துள்ள என் நண்பர் அஜித்தை நினைத்து மகிழ்கிறேன். அவர் தனது ஆர்வங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்கிறார். இந்திய மோட்டார் விளையாட்டுக்கு இது பெருமை” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in