பிக் பாஸ் 2: நாள் 14 - முதல் எலிமினேஷன் மமதி!

பிக் பாஸ் 2: நாள் 14 - முதல் எலிமினேஷன் மமதி!
Updated on
2 min read

குறும்படங்களும், அறிவுரைகளுமாக சனிக்கிழமை நிகழ்ச்சியை சுவாரஸ்வமாக கொண்டு சென்றிருந்தார் தொகுப்பாளர் கமல்ஹாசன்விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் பாடல்களுடன் தொடங்கியது நேற்றைய நிகழ்ச்சி.

ஜிப்ரான் மற்றும் அவரது குழுவினரின் இசையில் கமல் மற்றும் ஸ்ருதி ஹாசன் பாடினார்கள். பாடல்கள் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் திரையில் காட்டப்பட்டது.

பின்னர் பாடல் வெளியீடு முடிந்ததும் அகம் டிவி வழியாக சனிக்கிழமை நிகழ்ச்சியின் தொடர்ச்சி காட்டப்பட்டது. அதில் பாத்ரூம் அருகில் நித்யாவுடன் பேசிக்கொண்டிருந்தார் சென்றாயன். ”அந்த மனுஷன் (பாலாஜி) முகமே மாறிடுச்சு.. இதுக்கு அப்புறம் திருந்தி விடுவார். நீ அவருக்கு ஒரு வாய்ப்பு கொடு” என்று பாலாஜி சொல்ல அதற்கு நித்யா “நான்தான் பேசுறேனே.. மற்றவர்களை எப்படி பார்க்கிறேனோ அப்படித்தான் அவரையும் பார்க்கிறேன்” என்று தன் தரப்பு வாதங்களை வைத்தார்.

பெண்கள் அறையில் வைஷ்ணவி, ஜனனி, ரம்யா மூவரும் ”டேனியல் ரொம்ப நேர்மையாக இருக்கிறான். புடிக்கலைன்னா திட்டிடுறான்” என்று டேனியலை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

மும்தாஜ் பாலாஜியிடம் “உங்களுக்கு கோவம் வந்தால் யாரிடம் எப்படி பேசுகிறீர்கள் என்று தெரிவதில்லை.. உங்கள் மகள் பார்த்துக்கிட்டு இருக்காங்கள்ல” என்று அட்வைஸ் செய்து கொண்டிருந்தார்.

அகம் டிவியில் தோன்றிய கமல் ஒரு விளக்கத்தை சொன்னார். ”உடை மாற்றுவது தொடர்பாக கேமராக்கள் இருப்பதால் உங்களில் சிலருக்கு தயக்கம் இருக்கிறது. அப்படி டிஆர்பியை ஏற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை. அப்படிப்பட்டவர்களிடம் நான் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறினார்.

அடுத்ததாக எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட மும்தாஜ், மமதி, அனந்த் மூவரையும் எழுப்பிய கமல் யார் இங்கிருந்து வெளியே செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.

முதலில் பேசிய அனந்த் “கடந்த ஒரு வாரமாகவே வெளியே செல்ல வேண்டும் என்று மனதளவில் தயாராகி விட்டேன். அதற்கு என் உடல்நிலையும் ஒரு காரணம்” என்று கூறினார்.

அடுத்ததாக பேசிய மும்தாஜ் “நானும் வெளியே செல்ல தயார்தான். மக்கள் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

கடைசியாக பேசிய மமதி “இங்கிருந்த 14 நாட்களும் யாருக்கு என்ன தேவையோ அதை மனம் நோகாமல் செய்திருக்கிறேன். இங்கிருந்து செல்வதில் மனவலி இருக்கத்தான் செய்கிறது” என்று கூறினார்.

பின்னர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் யார் இங்கிருந்து வெளியேறுவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கமல் கேட்டார். பாதிக்கும் மேற்பட்டோர் அனந்த் தான் வெளியேறுவார் என்று கூறினார்கள்.

ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி “நீங்க அப்படியெல்லாம் வெளில போய்விட முடியாது” என்று அனந்தை உட்கார வைத்தார் கமல். இந்த வாரம் போய் விடலாம் என்று எதிர்பார்த்திருந்த அனந்த் கண் கலங்கினார்.

அடுத்த மமதி, மும்தாஜ் இருவரில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பை நீண்ட நீரம் நீடிக்க விடாமல் மமதி பெயரை அறிவித்தார் கமல். அறிவித்ததுதான் தாமதம் மும்தாஜ் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது. அனைவருக்கும் குட் பை சொல்லிவிட்டு மேடைக்கு வந்தார் மமதி.

ஊடகத் துறையில் இத்தனை வருடங்கள் இருந்தும் எதனால் இந்த கம்யுனிகேஷன் கேப் ஏன்? என்று கேட்ட கமலிடம் “இத்தனை வருடம் மக்களுக்கு என்னை பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த வீட்டுக்குள் என்னுடைய கதாபாத்திரம் மக்களுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்” என்று கூறினார்.

இந்த ’கம்யுனிகேஷன் கேப்’என்பதற்கு உதாரணமாக தேவர் மகன் சமயத்தில் சிவாஜிக்கும் கமலுக்கும் நடந்த ஓர் உரையாடலை பற்றி கமல் சொன்னது பார்வையாளர்களை நெகிழச் செய்தது.

இந்த சீசனின் முதல் எலிமினேஷனாக மமதி வெளியேற்றப்பட்டுள்ளார். அடுத்தடுத்த வாரங்களில் யார் இருக்கப் போகிறார்கள்.. யார் வெளியேறப் போகிறார்கள் எனபதை..

(தொடரும்....)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in