ரஜினியின் ‘பில்லா’ தோல்விப் படமா? - இயக்குநர் விஷ்ணுவர்தனின் கருத்தால் வெடித்த சர்ச்சை

ரஜினியின் ‘பில்லா’ தோல்விப் படமா? - இயக்குநர் விஷ்ணுவர்தனின் கருத்தால் வெடித்த சர்ச்சை

Published on

சென்னை: ரஜினி நடித்த ‘பில்லா’ ஒரு தோல்விப் படம் என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷ்ணுவர்தன், “ரஜினியின் ‘பில்லா’ படம் வெளியான காலகட்டத்தில் சரியாக ஓடவில்லை. இந்த படத்தையா நாம் ரீமேக் செய்யப் போகிறோம் என்று எனக்கு தோன்றியது. ஆனால் எனக்கு அந்த படத்தில் பிடித்தது என்னவென்றால் அந்த காலகட்டத்திலேயே அதில் ஒரு டார்க் ஆன கேரக்டரை வடிவமைத்திருப்பார்கள். எனவே அது ஒரு சிறந்த ஐடியா என்று எனக்கு தோன்றியது” என்று கூறியிருந்தார்.

விஷ்ணுவர்தனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலரும் ‘பில்லா’ வெற்றிப் படம் என்பதற்கான ஆதாரங்களை பதிவிட்டனர். இந்த நிலையில் விஷ்ணுவர்தனுக்கு பதிலளிக்கும் வகையில் ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1980ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ படம் சில்வர் ஜூபிளி ஹிட் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இதனை அசல் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் பாலாஜியின் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். தவறான தகவல்களை தவிர்க்க உங்கள் வார்த்தைகளில் துல்லியத்தை உறுதி செய்யுமாறு நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினி ரசிகர்கள் பலரும் விஷ்ணு வர்தனனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in