

தனக்கு பிடிக்காத துறை திரைத்துறை தான் என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தை விளம்பரப்படுத்த பேட்டியொன்று அளித்துள்ளார். அதில், “எனக்கு பிடிக்காத துறை திரைத்துறை தான். இப்போதும் கூட வேறு எதேனும் துறையில் வாய்ப்பு கிடைத்தால் போய்விடுவேன். ஒரு நார்மலான வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன்.
எனக்கு பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும், ஆகையால் பைலட்டாக விரும்பினேன். ஒரு நடிகையாக இருக்கும் போது சுதந்திரமாக இருப்பதை மறந்துவிட வேண்டும். பார்க்கில் போய் நடப்பது ரொம்பவே பிடிக்கும். அதெல்லாம் இப்போது முடியாது. சில சமயங்களில் இதெல்லாம் நமக்கு தேவையா என்று தோன்றும்.
தேசிய விருது கிடைப்பதற்கு முன்பு சத்தமே இல்லாமல் எங்கேயாவது போய்விடலாம் என நினைத்தேன். அப்போது தான் தேசிய விருது கிடைத்தது” என்று கூறியிருக்கிறார் நித்யா மேனன். அவருடைய இந்தப் பதில் இணையத்தில் பெருவாரியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.