

‘டிமான்ட்டி காலனி’ படத்தின் 3-ம் பாகம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.
’டிமான்ட்டி காலனி’ படத்தின் முதல் இரண்டு பாகங்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றவை ஆகும். இதில் முதல் பாகத்தினை அருள்நிதியும், இரண்டாம் பாகத்தினை அஜய் ஞானமுத்துவும் தயாரித்திருந்தார்கள். 2-ம் பாகத்தினை BTG நிறுவனம் வெளியிட்டு பெரும் லாபம் ஈட்டியது.
தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ பேச்சுவார்த்தையில் இருக்கிறது. கதையாக தயாராகிவிட்டது என்பதால் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டில் நடத்த அஜய் ஞானமுத்து திட்டமிட்டு இருக்கிறது. முதல் இதனை BTG நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது.
ஆனால், படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு விலகிவிட்டது. தற்போது கோல்ட் மைன்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து, விரைவில் ஒப்பந்தமாக கையெழுத்தாகும் என்கிறார்கள் திரையுலகில்.