இயக்குநர்களை விட ரசிகர்களுக்கு அறிவு அதிகம்: இயக்குநர் பாலா

இயக்குநர்களை விட ரசிகர்களுக்கு அறிவு அதிகம்: இயக்குநர் பாலா
Updated on
1 min read

திரைப்பட இயக்குநர்களை விட ரசிகர்களுக்கு அறிவு அதிகம் என இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் வீடியோ வடிவிலான பேட்டிகளை தவிர்ப்பவர் இயக்குநர் பாலா. தற்போது ‘வணங்கான்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் குறித்து பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.

அப்பேட்டியில் இப்போதைய ரசிகர்களின் மனநிலை குறித்த கேள்விக்கு பாலா, “பாலு மகேந்திரா சாரிடம் நான் தெரிந்துகொண்டது என்னவென்றால், ஒருவனுக்கு பசி என்றால் வாழைப்பழம் கொடு. உரிச்சி திங்க முடியாதவன் என்றால் உரிச்சிக் கொடு. அதை விட்டுவிட்டு ஏன் வாழைப்பழத்தை ஊட்டி விடுற, அது அவனுடைய வேலை என்பார்.

இயக்குநர்கள் 10 அல்லது 15 படம் இயக்குகிறார்கள். ஆனால் ரசிகர்கள் நூற்றுக்கணக்கான படங்கள் பார்க்கிறார்கள். ஆகையால் இயக்குநர்களை விட ரசிகர்களுக்குதான் அறிவு அதிகம். அவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. நீ திரையில் சொல்லு. நான் புரிந்துகொள்கிறேன் என்பது தான் அவர்களுடைய பாணி. அதேபோல் குச்சி எடுத்துக் கொண்டு படத்தில் வகுப்பு எடுக்கவும் முடியாது.

அவர்களைப் பொறுத்தவரை படம் எடுப்பது உன் வேலை, அதை நாங்கள் புரிந்துகொள்வோம் என்பதுதான் அவர்களது எண்ணம். அந்த அகம்பாவம் அனைத்து ரசிகர்களுக்குமே இருக்கிறது. அது நல்லதும் கூட” என்று தெரிவித்துள்ளார் பாலா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in