

ரஜினி, கமலுடன் இணைந்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு இயக்குநர் பாலா பதிலளித்துள்ளார். ’‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25 ஆண்டு திரைப்பயணம் ஆகியவை ஒரே விழாவாக நடைபெற்றது. இதில் சூர்யா, சிவகார்த்திகேயன், சிவகுமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். இந்த விழாவில் சிவகுமார் – பாலா இருவருக்கும் இடையே கேள்வி – பதில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் சிவகுமாரின் பல்வேறு கேள்விகளுக்கு பாலா பதிலளித்தார். இதில் “கமல் – ரஜினி மாதிரி ஹீரோக்கள் கால்ஷீட் கொடுத்தால் படம் பண்ணுவீர்களா” என்ற சிவகுமாரின் கேள்விக்கு, பாலா “வாய்ப்பில்லை சார். அவர்களுடைய பாதை வேற, என்னோட பாதை வேற” என்று பதிலளித்தார்.
“உங்க பாதைக்கு வந்து அகோரி மாதிரி ரஜினி நடிக்கிறேன் என்று சொன்னால் ஒத்துப்பீர்களா” என்ற கேள்விக்கு “சொல்லமாட்டார்” என பதிலளித்துள்ளார் பாலா.
பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார், பின்னணி இசைக்கு சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.