காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: கோவாவில் நடந்த திருமணம்! 

காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: கோவாவில் நடந்த திருமணம்! 
Updated on
1 min read

கோவா: நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் வியாழக்கிழமை (டிச.12) கோவாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் இருவரும் சேர்ந்து படிப்பை தொடர்ந்தனர். நல்ல நண்பர்களாக தொடங்கி காதலர்களாக மாறியுள்ளனர்.

தனது காதல் குறித்து பொதுவெளியில் வெளிபடுத்தாத கீர்த்தி சுரேஷ் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றின் மூலம் காதலை உறுதி செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் திருப்பதி தரிசனத்தின்போது திருமணம் குறித்தும் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவித்தார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது. இதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்டார். வேஷ்டி, சட்டையுடன் கூடிய லுக்கில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், திரையுலகினர் கீர்த்தி - ஆண்டனி திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in