

’சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை ஜூலை 23-ல் வெளியாகவுள்ளது. படத்தை செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது படக்குழு. விரைவில் உக்ரைனில் ஒரு பாடலைப் படமாக்க செல்லவுள்ளார்கள். இப்பாடலில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் இடம்பெறுகின்றனர்.
இந்நிலையில் ஜூலை 23-ம் தேதி படத்தின் இசையையும், செப்டம்பரில் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக படத்தின் இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.