

கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, ஷிவதா நடித்த 'நெடுஞ்சாலை' படத்தை இந்தி ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவுகிறது.
ஆரி, ஷிவதா, சலீம் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில், கிருஷ்ணா இயக்கிய படம் 'நெடுஞ்சாலை'. சத்யா இசையமைத்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
வித்தியாசமான போஸ்டர்கள், காட்சி அமைப்புகள் என விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடித்த ஆரி தற்போது 'கடை எண் 6' மற்றும் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாயகி ஷிவதா தற்போது தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் கிருஷ்ணா மீண்டும் ஆரி நாயகனாக்கி 'மானே தேனே பேயே' என்னும் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் 'நெடுஞ்சாலை' படத்தை இந்தி மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தி தயாரிப்பாளர்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டு, ரீமேக் உரிமையை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். தெலுங்கி தயாரிப்பாளர்களும் பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகிறார்கள்.