

சென்னை: டிசம்பர் 12-ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.
டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்தநாள். அன்றைய தினம் ரஜினி படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். இந்தாண்டு அதே நாளில் ரஜினியின் 2 படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ‘கூலி’ படத்தின் டீசர் மற்றும் ‘ஜெயிலர் 2’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இரண்டுமே அன்றைய தினம் வெளியாகிறது. ‘கூலி’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.
அதே போல் ‘ஜெயிலர் 2’ குறித்த அறிமுக டீசரும் வெளியாகவுள்ளது. இதற்காக ஒரு நாள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஆகையால் இரண்டு படங்களையும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது. இரண்டு படங்களுக்குமே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஜெயிலர்’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்பது நினைவுக் கூரத்தக்கது.