“டிசம்பரில் திருமணம்... அதற்காக திருப்பதி தரிசனம்!” - நடிகை கீர்த்தி சுரேஷ்

“டிசம்பரில் திருமணம்... அதற்காக திருப்பதி தரிசனம்!” - நடிகை கீர்த்தி சுரேஷ்

Published on

சென்னை: “அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற இருக்கிறது” என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் வெள்ளிக்கிழமை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அடுத்து என்னுடைய நடிப்பில் இந்தி படமான ‘பேபி ஜான்’ திரைக்கு வருகிறது. அடுத்த மாதம் என்னுடைய திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தரிசனத்துக்காக திருப்பதிக்கு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது காதலருடன் பின்புறமாக திரும்பியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “15 ஆண்டு கால உறவு. எப்போதும் தொடரும். ஆண்டனி - கீர்த்தி” என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது திருமணத்தை அவரே உறுதி செய்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரே பள்ளியில் படித்த இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியுள்ளனர்.

கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் தொடங்கி இன்று வரை இருவரும் காதலர்களாக பயணித்து வருகின்றனர். இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில் வரும் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் நடைபெற உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in