“நடிகர் விக்ரம் படத்தில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!” - பாடகர் ரஞ்சித் பேட்டி

“நடிகர் விக்ரம் படத்தில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!” - பாடகர் ரஞ்சித் பேட்டி
Updated on
1 min read

’சொல்லிட்டாளே அவ காதல’, ‘ஜிங்குணமணி’, ‘விளையாடு மங்காத்தா’ உள்ளிட்டப் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாடகர் ரஞ்சித். தன்னுடைய சொந்த இசை பேண்ட், ‘பள்ளிக்கூடம்’ கிளாஸ், இசைக் கச்சேரி என பிஸியாக இருந்தவர் அளித்த பேட்டியில் இருந்து...

“ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த டேலண்ட் ஷோ ஒன்றில் எனக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. பின்பு, இசையமைப்பாளர் மணி சர்மாவிடம் கோரஸ் பாடினபோதுதான் அவர் என் குரல் தனித்துவமாக இருந்ததை கண்டறிந்தார். அவர் இசையமைத்த ‘ஆசை ஆசையாய்’ பாடலில் எனக்கு பாட வாய்ப்புக் கொடுத்தார். என் திறமை மீது அவருக்கு தனிப் பிரியம் இருந்தது. ஆனால், தமிழ் சினிமாவில் அவர் இன்னும் பல பெரிய உயரங்களை அடைந்திருக்க வேண்டும்.

ரசிகர்களைப் போலவே எனக்கும் அந்த வருத்தம் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு கால சூழ்நிலை இருக்கிறது. மணி சர்மா சாருக்கும் தமிழ் சினிமாவில் அத்தகைய உயரம் நிச்சயம் காத்திருக்கிறது. மணி சர்மாவைப் போலவே யுவனுக்கும் என் குரல் மீதும் தனிப்பிரியம் இருக்கிறது. அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

தான் பாடிய பாடல்களில் மறக்க முடியாத அனுபவம் கொடுத்த ஒரு பாடல் பற்றியும் பகிர்ந்து கொண்டார். “விக்ரம் சாரின் ‘அருள்’ படத்தில் நான் பாடிய ’சூடாமணி’ என்ற பாடல் எனக்குப் பிடித்தமானது. அந்தப் பாடலை திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று நண்பர்களுடன் கிளம்பி விட்டேன். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் சண்டை என க்ளைமாக்ஸே நெருங்கி விட்டது. ஆனால், அந்தப் பாடல் வரவில்லை.

நண்பர்களோ என்னைத் திரும்பி பார்க்கிறார்கள். ஹீரோ- வில்லன் சண்டை முடிந்த பிறகுதான் அந்தப் பாட்டு வருகிறது. எனக்கு பாட்டு இருக்கிறதே என நிம்மதி அடைவதா, இல்லை இங்கு வைத்திருக்கிறார்களே எனக் கவலைப்படுவதா எனத் தெரியாத உணர்வு அது. இப்போது சினிமாவில் முன்பைப் போல பாடல்கள் பாடுவதில்லைதான். நண்பர்களுடன் சேர்ந்து ‘பள்ளிக்கூடம்’ என்ற ஆன்லைன் கிளாஸ் நடத்தி வருகிறேன். பாடல்கள், நடனம், நடிப்பு ஆகியவற்றில் விருப்பமுள்ளவர்கள் அதில் இணையலாம். இதைத்தவிர, ‘மக்கா’ என்ற பேண்டும் வைத்திருக்கிறேன். சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தால் மீண்டும் பாடத் தயார்” என்றார். முழு நேர்காணலையும் காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in