விவாகரத்து வழக்கு: சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி பேச்சுவார்த்தை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் இன்று நேரில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர்.

சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் நடிகர் ரவி. இவர் ‘ஜெயம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதால் ‘ஜெயம் ரவி’ என்ற புனைப்பெயருடன் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநராக உள்ளார். நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது மனைவியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்தார். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “எனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவித்து அந்த பதிவை ரத்து செய்ய வேண்டும்.” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி, இருவருக்கும் இடையிலான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தின் மூலமாக இன்றே இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகி இருந்தார். பின்னர் இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in