

‘புஷ்பா 2’ படத்தின் விழாவில், ‘குட் பேட் அக்லி’ அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ரவி.
சென்னையில் ‘புஷ்பா 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இந்த மேடையில் தயாரிப்பாளர் ரவியிடம் ‘குட் பேட் அக்லி’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு “இறுதிகட்டப் படப்பிடிப்பை நெருங்கிவிட்டோம். இன்னும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை விரைவில் தெரிவிப்போம். முன்பாக பொங்கல் வெளியீடு என்று பலமுறை கூறி விட்டோம். ‘குட் பேட் அக்லி’ படம் அற்புதமாக வந்திருக்கிறது. தமிழில் எங்களது முதல் தயாரிப்பு கண்டிப்பாக பெரும் வெற்றிப் படமாக இருக்கும் என நம்புகிறேன்.” என்று பதிலளித்துள்ளார் ரவி.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் ‘குட் பேட் அக்லி’ படத்தினை தயாரித்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.