சல்மான் கானுடன் ரஜினி அல்லது கமல்: அட்லீ மெகா திட்டம்

சல்மான் கானுடன் ரஜினி அல்லது கமல்: அட்லீ மெகா திட்டம்
Updated on
1 min read

சல்மான் கானுடன் ரஜினி அல்லது கமல் இருவரில் ஒருவரை நடிக்க வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.

அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

தற்போது இப்படத்தின் கதையினை ‘மகதீரா’ பாணியில் உருவாக்கி இருக்கிறார் அட்லீ என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நிகழ்காலமும், அரசர் காலமும் இருப்பது போன்று கதையினை உருவாக்கி இருக்கிறார். மறுபிறவி எடுத்து வருவது போன்று திரைக்கதை உருவாக்கி இருப்பதாக கூறுகிறார்கள்.

இதில் சல்மான்கான் உடன் நடிப்பதற்கு ரஜினி அல்லது கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கண்டிப்பாக இருவரில் ஒருவரை சல்மான் கானுடன் நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அட்லீ. இப்படத்தில் நடிக்க இருப்பவர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

2025-ம் ஆண்டு கோடை விடுமுறை சமயத்தில் படப்பிடிப்பினைத் தொடங்கி, 2026-ம் ஆண்டு வெளியிடும் திட்டமும் இருப்பதாக தெரிகிறது. இதனால் நடிகர்களை முடிவு செய்துவிட்டு, படப்பிடிப்புக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கவுள்ளார் அட்லீ. இதில் இதுவரை திரையுலகில் வராத ஓர் உலகினை உருவாக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் இந்திய திரையுலகில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in