‘‘தனுஷை பார்த்து பெருமை அடைகிறேன். ஏனெனில்...’’ - செல்வராகவன் பகிர்வு

‘‘தனுஷை பார்த்து பெருமை அடைகிறேன். ஏனெனில்...’’ - செல்வராகவன் பகிர்வு
Updated on
1 min read

தனுஷை பார்த்து பெருமைப்படுவதாக அவரது அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என அனைத்து துறைகளிலும் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார் தனுஷ். அவருடைய வளர்ச்சி குறித்து இயக்குநர் செல்வராகவன், “தனுஷின் வளர்ச்சி சந்தோஷமாக இருக்கிறது. அதைத் தாண்டி ஒரு அம்மாவை போல் உணர்கிறேன். தனுஷைப் பார்த்து பெருமையாக இருக்கிறது.

பலரும் தனுஷை பற்றிச் சொன்னார்கள். அதனை ‘ராயன்’ படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அந்த உழைப்பு மிருகத்தனமான உழைப்பு என்பேன். அப்போது அவர் தூங்கவே இல்லை. படப்பிடிப்பு முடிந்து நானெல்லாம் சென்றுவிடுவேன். அவரோ ராத்திரி எல்லாம் வேலை செய்துவிட்டு, மீண்டும் காலையில் வந்து விடுவார். அவரிடமே ‘இந்த மாதிரி எல்லாம் ராட்சச தனமாக உழைப்பதற்கு கடவுளின் ஆசி வேண்டும்’, என்றேன். அந்தளவுக்கு அவர் திரையுலகை நேசித்து பணிபுரிவது சந்தோஷமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில்தான் நடிகராக அறிமுகமானார் தனுஷ். இருவரும் இணைந்து பணிபுரிந்த ஆரம்ப காலகட்ட படங்கள் அனைத்துமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. தனுஷ் - செல்வராகவன் இருவரும் கடைசியாக ‘நானே வருவேன்’ படத்தில் இணைந்து பணிபுரிந்திருந்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in