சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல்!

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல்!
Updated on
1 min read

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அமரன்’. இந்தப் படத்தில் சாய் பல்லவி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் நாள் ரூ.45 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 19 நாட்களை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.140 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் இது தான் அவரது உச்சபட்ச வசூல் சாதனை படம். இந்த ஆண்டில் வெளியான படங்களில் 2வது அதிகபட்ச வசூல். விஜய்யின் ‘தி கோட்’ ரூ.450 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in