நயன்தாரா Vs தனுஷ் | இதுவும் ‘புரொமோஷன்’ தானா கோபால்..?

நயன்தாரா Vs தனுஷ் | இதுவும் ‘புரொமோஷன்’ தானா கோபால்..?
Updated on
1 min read

‘நானும் ரவுடி தான்’ படத்தின் சில காட்சிகளை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப் படத்தின் ‘டிரெய்ல’ரில் அனுமதியின்றி சேர்த்தமைக்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தயாரிப்பாளர் தனுஷ் தரப்பு.

இதனையொட்டி தனுஷூக்கு எதிராக நயன்தாரா நீண்ட புகார் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட, சமூக வலைதளங்களில் அது பேசுபொருளானது. நயன்தாரா-விக்னேஷ்சிவன் இணை இப்படத்தின் காட்சிகளை, இசையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்த தனுஷ், ரிலீஸ் நேரத்தில் ரூ.10 கோடி கேட்டு ‘ஷாக்’ கொடுத்திருக்கிறார்.

இதனால் பொங்கி எழுந்த இணையச் சமூகம், “நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கித்தானே திருமண வீடியோவை ஒளிபரப்புகிறீர்கள். தயாரிப்பாளராக தனுஷ் ‘காப்புரிமை’ கேட்டதில் என்ன தவறு? இது நயனின் ‘புரொமோஷன்’ உத்தி” என்று வறுத்தெடுக்க, “தனுஷ் கேட்டுக் கொண்டதால், அவர் தயாரிப்பில் வெளிவந்த ‘எதிர்நீச்சல்’ படத்தில் ஒரு பாடலுக்குச் சம்பளமின்றி நடித்த நயன்தாராவுக்கா இந்த நிலைமை?” என்றும் சிலர் நியாயம் கேட்கிறார்கள்! - நேசமணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in