‘கங்குவா’வை கதறவிடும் நெட்டிசன்கள்!

‘கங்குவா’வை கதறவிடும் நெட்டிசன்கள்!
Updated on
1 min read

சூர்யாவின் முதல் ‘பான்’ இந்தியா படமான ‘கங்குவா’வை, முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே சோஷியல் மீடியாவில் இழுத்துப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

படம் நன்றாக இருக்கிறது - இல்லை என்றால், ஒரு வரியில் விமர்சித்துவிட்டு செல்லலாம். ஆனால், சோஷியல் மீடியாவில் வெளியாகும் வீடியோ ரகங்கள், விமர்சனக் கனைகள் படத்தைத் தாண்டி அப்படத்தில் உழைத்தவர்கைளயும் குறிவைத்து தாக்குகின்றன. “இப்படத்தை வாயைப் பிளந்து பார்ப்பார்கள்” என்று சூர்யா பேசியைத இதற்கு ஒரு காரணமாகச் சொல்கின்றனர். ஆனால், அது எல்லை தாண்டி போகிறது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது. அண்மைக் காலமாகப் சினிமா விமர்சனத்தைத் தாண்டி தனிமனித விருப்பு வெறுப்புகளும் சோஷியல் மீடியாவில் எதிரொலிக்கின்றன.

‘ஜெய்பீம்’ பட சர்ச்சை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சூர்யாவின் மனைவி ஜோதிகா கோயில், பள்ளி, மருத்துவமைனையை வைத்து தெரிவித்த கருத்து போன்றைவயும் ‘கங்குவா’ படத்தோடு சேர்ந்துவிட்டதை சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. அதயொட்டியும் ‘ட்ரோல்’கள் பறக்கின்றன. இதில் சில அரசியல் அடிப்பொடிகளும் அடங்கியிருக்கிறார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். இந்தப் பின்னணியில் நடிகை ஜோதிகா வெளியிட்ட பதிவு > அதிசய ‘கங்குவா’ தருவது அசல் திரை அனுபவம்: ஜோதிகா அடுக்கும் காரணங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in