‘நிறங்கள் மூன்று’ எந்த ஜானரிலும் அடங்காது: அதர்வா முரளி

‘நிறங்கள் மூன்று’ எந்த ஜானரிலும் அடங்காது: அதர்வா முரளி
Updated on
1 min read

அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம், 'நிறங்கள் மூன்று'. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 22-ம் தேதிவெளியாகிறது. ஐங்கரன் இன்டர்நேஷனல் கருணா மூர்த்தி தயாரித்துள்ள இந்தப் படம் பற்றி, அதர்வா முரளி கூறியதாவது: கார்த்திக் நரேனின் 'துருவங்கள் பதினாறு' படம் பார்த்ததில் இருந்தே அவருடன் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர் ஒரு காட்சியை அணுகும் விதம் வித்தியாசமாக இருக்கும்.

நிஜத்தில் என் கதாபாத்திரத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தைஎனக்கு இதில் கொடுத்துள்ளார். பயம் கலந்த சந்தோஷத்துடன் சம்மதித்தேன். உண்மையிலேயே இது வித்தியாசமான படம். எந்த ஜானரிலும் இதை அடக்க முடியாது. சரத்குமார், ரஹ்மான் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. துஷ்யந்த், அம்மு அபிராமி என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிறைய புது விஷயங்கள் இதில் உள்ளன" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in