தனுஷின் ‘குபேரா’ கிளிம்ஸ் எப்படி? - பணமும், சதுரங்க ஆட்டமும்! 

தனுஷின் ‘குபேரா’ கிளிம்ஸ் எப்படி? - பணமும், சதுரங்க ஆட்டமும்! 

Published on

சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷின் கெட்டப்பும், பின்னணி இசையும் கவனம் பெறுகிறது.

க்ளிம்ஸ் எப்படி? - பெருநகரத்தின் காட்சியும், அதைத் தொடர்ந்து கையில் நாய்க்குட்டியை சுமந்து நிற்கும் தனுஷின் அப்பாவி முகமும் தொடக்க ஃப்ரேமில் படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குடும்பத்துடன் இருக்கும் நாகர்ஜுனா, கார்ப்ரேட் முதலாளி, பொலிவிழந்த முகத்துடன் ராஷ்மிகா மந்தனா என காட்சிகள் நகர ஓரிடத்தில் பணக்குவியலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

யாசகரான தனுஷ் வேகமாக ஓடும் காட்சியும், அதைத் தொடர்ந்து சதுரங்கத்தில் காய்களை நகர்த்தும் இடமும், விடாது பின் துரத்தும் விறுவிறுப்பான தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும், க்ளிம்ஸை கவனிக்க வைக்கிறது. யாசகராக இருக்கும் தனுஷ் இறுதியில் வேட்டி சட்டையுடன் நிற்கும் காட்சி சர்ப்ரைஸ்கள் உண்டு என்பதை உறுதி செய்கிறது. மொத்தத்தில் க்ளிம்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குபேரா: தனுஷின் 51-வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’, ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. க்ளிம்ஸ் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in