வணங்கான் ரிலீஸ் எப்போது?

வணங்கான் ரிலீஸ் எப்போது?

Published on

பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்நிலையில் இந்தப் படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கேட்டபோது, “வணங்கான் படத்தின் ரிலீஸ் வேலைகள் சென்று கொண்டிருக்கின்றன. விரைவில் அறிவிப்போம்.

வி ஹவுஸ் தயாரிப்பில் ராம் இயக்கி, நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள, ‘ஏழு கடல் ஏழு மலை’ பொங்கலுக்கு வெளியாகிறது. நான் வெளியிடும் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ ஜனவரி மாதம் வெளியாகும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in