பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தில் விஜே சித்து, அர்ஷத் கான்!

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தில் விஜே சித்து, அர்ஷத் கான்!
Updated on
1 min read

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ‘டிராகன்’ படத்தில் பிரபல யூடியூபர்கள் விஜே சித்து, அர்ஷத் கான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தில் பிரபல யூடியூபர்கள் விஜே சித்து, அர்ஷத் கான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுகுறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், “அன்புள்ள சித்து மற்றும் அர்ஷத், நீங்கள் இருவரும் உங்கள் யூடியூப் சேனல் மூலம் மக்களை அவர்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கிறீர்கள். ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்துக்குச் செல்வதற்கு முன்னால் உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்ததை படப்பிடிப்பின் போது நாங்கள் கண்டோம். இப்போது பெரிய திரையில் நடிகர்களாக, முக்கிய கதாபாத்திரங்களில் உலகம் உங்களை பார்ப்பதற்கான நேரம். ‘டிராகன்’ படத்தில் பிரதீப் உடன் சேர்ந்து நீங்கள் செய்த அட்டகாசங்களை உலகுக்கு காட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் யூடியூபில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முன்பு ‘ப்ளாக் ஷீப்’ சேனலில் ‘ஃபன் பண்றோம்’ என்னும் பிராங்க் நிகழ்ச்சியின் மூலம் விஜே சித்து மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு தனியாக சேனல் தொடங்கிய விஜே சித்து தொடர்ந்து பிரபலங்களுடன் வீடியோ வெளியிட்டு வருகிறார். இவரும் அர்ஷத் கானும் சேர்ந்து வெளியிடும் வி-லாக் வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது சேனலை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in