சுசீந்திரனின் ‘2கே லவ் ஸ்டோரி’ டீசர் எப்படி? - காதலும் பிரிவும்!

சுசீந்திரனின் ‘2கே லவ் ஸ்டோரி’ டீசர் எப்படி? - காதலும் பிரிவும்!
Updated on
1 min read

சென்னை: சுசீந்திரன் இயக்கியுள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் எப்படி? - இன்றைய 2கே கிட்ஸ் காதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளதை டீசர் உணர்த்துகிறது. காதல், பாடல், காதலின் பிரிவு இவற்றை மையப்படுத்தியே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இடையில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றும் வந்து செல்கிறது. திருமண போட்டோ எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது. ஒரு பாடலின் வழியே காட்சிகள் நகரும் வகையில் டீசர் கட் செய்யப்பட்டுள்ளது. டீசரில் ஈர்க்கும் அம்சங்கள் எதுவும் புதிதாக இல்லை.

2கே லவ்ஸ்டோரி: இயக்குநர் சுசீந்திரன் இன்றைய தலைமுறையின் காதல், நட்பைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கியுள்ள படம், ‘2கே லவ்ஸ்டோரி’. ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன், இமான் இணையும் 10-வது திரைப்படம் இது. கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ளார். வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. டீசர் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in