

‘விடாமுயற்சி’ படத்தின் தாமதத்திற்கான காரணம் குறித்து சுப்ரீம் சுந்தர் பகிர்ந்துள்ளார்.
‘கங்குவா’ படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து இயக்குநர் சுப்ரீம் சுந்தர் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்கள் குறித்து, “இயக்குநர் மகிழ் திருமேனி செதுக்கிக் கொண்டு இருக்கார். நிறைய பேர் நிறைய விமர்சனங்கள் சொல்கிறார்கள். படம் தாமதத்திற்கு காரணம் படப்பிடிப்பு இடங்கள் மட்டுமே. அப்படத்தில் வேறொரு அஜித் சாரைப் பார்ப்பீர்கள்.
ஹம்மர் காரை வைத்து காட்சிக்காக சண்டைக் காட்சிகளை உருவாக்கினோம். அது உண்மையில் நடந்த விபத்து தான். சினிமாவுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. கூடிய விரைவில் அப்படத்தை பார்ப்பீர்கள். மிகப்பெரிய படமாக அது அமையும்.
அதே போல் ‘குட் பேட் அக்லி’ படமும் நன்றாக வந்துள்ளது. ‘பில்லா’ படத்துக்குப் பின் வேறொரு அஜித் சாரை அதில் பார்ப்பீர்கள். சண்டைக் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளது. இரண்டு படங்களுமே கொண்டாடக் கூடிய படமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களின் சண்டைக் காட்சிகளையும் சுப்ரீம் சுந்தர் தான் உருவாக்கி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ‘விடாமுயற்சி’ படத்தின் சண்டைக் காட்சிகள் உருவாக்கத்தில் நடந்த விபத்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அது குறித்து தான் சுப்ரீம் சுந்தர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.