உதவி இயக்குநரை மணந்தார் ‘பிக்பாஸ்’ விக்ரமன்! 

உதவி இயக்குநரை மணந்தார் ‘பிக்பாஸ்’ விக்ரமன்! 
Updated on
1 min read

சென்னை: ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற விக்ரமனுக்கும், உதவி இயக்குநரான ப்ரீத்தி கரிகாலனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

யூடியூப் சேனலின் தொகுப்பாளராக இருந்த விக்ரமன், ‘பிக்பாஸ்’ 6-வது சீசனில் பங்கெடுத்து ரன்னராக வந்தார். திரைப்படம் ஒன்றில் அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘கதை திரைக்கதை வசனம்’ ஆகிய படங்களில் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்த ப்ரீத்தி கரிகாலன் என்பவரை கரம் பிடித்தார்.

இவர்களின் திருமணம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்து மத முறைப்படி தாலி கட்டியும், கிறிஸ்துவ முறைப்படி மோதிரமும் மாற்றிக்கொண்டனர்.

ப்ரீத்தி கரிகாலனை பொறுத்தவரை அவர், முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனுக்கு பேத்தி முறையில சொந்தம் என கூறப்படுகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை விக்ரமன் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். விரைவில் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in