“ராணுவ உடையை அணிந்த பிறகு எனக்குள் சில மாற்றங்கள்...” -  சிவகார்த்திகேயன் பகிர்வு

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

கோவை: “அமரன் படத்தில் ராணுவ உடையை அணிந்த பிறகு எனக்குள் சின்னச் சின்ன மாற்றங்கள் வந்துள்ளன” என கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று (அக்.29) நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று பேசும்போது, “அமரன் திரைப்படத்தில் ராணுவ உடையை, கடைசியாக போடும் போது, நினைவாக வைத்துக்கொள்ள அந்த உடையை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டேன். ராணுவ உடை அணிந்த பிறகு சின்னச் சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளன.

காமெடி, கலாய்ப்பது என்பது என் பிறப்பிலேயே வந்து விட்டது. படப்பிடிப்பு தளம் சீரியஸாக இருக்கும், ஆனால் நான் கொஞ்சம் ஜாலியாத்தான் இருப்பேன். இப்படத்தில் நடிக்கும் முன்னர் முதலில் மன ரீதியாக தான் தயாரானேன். பின்னர் தான் உடலை தயார் செய்தேன். உடல் வலிமை இருந்தால் தான், இப்படத்தில் நடிக்க சரியாக இருக்கும். உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று கடினமாக எடைகளை தூக்கக்கூடிய ஆள் நான் கிடையாது. ஆனால், இப்படத்துக்கு கொஞ்சம் அதிகம் தூக்கிய காரணத்தினால் தான் கொஞ்சம் உடலில் கட்டி கட்டியாக உள்ளது. முகுந்த் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாகத் தான் தெரியும். ஆனால், இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம்’’ என்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை போல், நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி கேட்டற்கு, “சினிமாவில் இன்னும் நான் செய்ய வேண்டிய கதாபாத்திரங்கள் நிறைய உள்ளன. எனவே, நீங்கள் கூறியதை பற்றி பின்னர் பார்ப்போம். இந்நிகழ்ச்சியின் போது மாணவர்கள் என்னைப் பார்த்து துப்பாக்கிச் சின்னத்தைக் காட்டினர். ‘கோட்’ திரைப்படத்தில் சின்னதாக துப்பாக்கியை காட்டி ஒரு ரோல் செய்தேன். அதற்காகத்தான் கைகளை உயர்த்தி, மாணவர்கள் என்னிடம் துப்பாக்கிச் சின்னத்தைக் காட்டினர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in