

நீங்கள் சிகரெட் இல்லாமலும் ஸ்டைலாகத்தான் இருப்பீர்கள் என்று பாமக கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் விஜயை விமர்சித்துள்ளார்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படம் இந்த வருடம் தீபாவளியன்ரு திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்காமல் இருந்த நிலையில் நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படக்குழுவினர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இடப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு முன்னணி நடிகர் எவ்வாறு தனது படங்களில் புகைப்பிடிக்கும் காட்சியிl நடிப்பார் என்று பலரும் விமர்சித்தனர்.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,” நீங்கள் சிகரெட் இல்லாமலும் ஸ்டைலாகத்தான் இருப்பீர்கள் விஜய்.
நடிகர் விஜய் தனது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது அவமானமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
பின்னர் நடிகர் விஜய் திரைப்படங்களில் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தார் அன்புமணி ராமதாஸ்.