தவெக மாநாடு: விஜய் உரையைக் கேட்க நடிகர் விஷால் ஆவல்!

தவெக மாநாடு: விஜய் உரையைக் கேட்க நடிகர் விஷால் ஆவல்!
Updated on
1 min read

சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறவுள்ளது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதன் முறையாக தனது அரசியல் பேச்சைத் தொடங்கவிருப்பதால் விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார். மயிலாப்பூரில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார் விஷால். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஷால், “விஜய்க்கு வாழ்த்துகள். அவர் அரசியலில் முதல் அடி எடுத்து வைக்கிறார். மிகவும் ஆடம்பரமாக ஏற்பாடுகள் நடப்பது தெரிகிறது.

விஜயகாந்த் அண்ணனுக்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்புடன் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய்தான். மக்களுக்கு என்ன மாற்றம் கொண்டுவர போகிறார், மக்களுக்கு என்ன விஷயங்கள் வைத்திருக்கிறார் என்பது தெரியும். சினிமாவை விட்டு அரசியலுக்கு வரப்போகிறார் என்றால் அது பெரிய முடிவு. கோடிகளில் சம்பாதிக்கும் ஒருவர், அந்த கோடிகள் எல்லாம் வேண்டாம், நான் மக்களுக்காக போகிறேன் என்பது வரவேற்ககூடிய விஷயம். அதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர் என்ன பேசப் போகிறார் என்பதை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று விஷால் கூறியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in