

நடிகை, தயாரிப்பாளர், தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் நடிகை ப்ரியா ராமன். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அவரது கணவரும், நடிகருமான ரஞ்சித் போட்டியாளராகக் கலந்து கொண்டிருக்கிறார். இந்த தலைமுறை ரசிகர்களிடமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றதாக சொல்லும் ப்ரியா ராமன், ரஞ்சித் பிக்பாஸில் இறுதி வரை சென்று நிச்சயம் செல்வார் என்கிறார்.
இதுமட்டுமல்லாது தமிழ் சினிமாவில் அவருடைய அறிமுகம் பற்றிய நினைவுகளையும் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். “நடிகர் ரஜினிகாந்துடன் ‘வள்ளி’ படத்தில் அறிமுகமானது என் அதிர்ஷ்டம்தான். அவரே முதன்முதலில் கதை எழுதி, தயாரித்த படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்தேன். அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 16 விருதுகளை வாங்கினேன். அப்போது சினிமாவுக்கு புதுமுகம் என்பதால் ரஜினி சார் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். அதாவது, ‘மீடியாவில் இன்று உன்னைப் பற்றி வரும் நெகட்டிவான விஷயங்களுக்கு வாழ்நாள் குறைவுதான். அதனால், அதைப் பற்றி கவலைப்படாமல் உன் வேலையில் மட்டும் கவனம் செலுத்து’ என்றார். அதை இன்று வரை கடைபிடித்து வருகிறேன்.
அதன் பிறகு எனக்கு மறக்க முடியாத கதாபாத்திரம் ‘சூர்யவம்சம்’ படத்தில் அமைந்ததுதான். ஏனெனில், அதற்கு முன்பு வரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் யாரேனும் என்னை யோசித்தார்களா எனத் தெரியவில்லை. குறிப்பாக, ‘ரோசாப்பூ...’ பாடல் இப்போது வரை பலரும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். நடிகர்கள் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு பாடல் நினைவு கூறும்படி இப்படி அமையும். ஆனால், நான் நடித்த பெரும்பாலான படங்களில் பெயர் சொல்லும் பாடல்கள் எனக்கு அமைந்ததில் சந்தோஷம்” என்றார். மேலும், “கேம் சேஞ்சராக தர்ஷிகா இருப்பார். தர்ஷா தான் உண்மையில் ட்ராமா குயின். ரஞ்சித் இறுதிவரை சென்று டஃப் கொடுப்பார்” என பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அதில் ரஞ்சித் மற்றும் பிற போட்டியாளர்களின் விளையாட்டு உள்ளிட்ட பல விஷயங்களை நேர்காணலில் பேசியிருக்கிறார். முழு நேர்காணலையும் காண: