வித்தியாசமான தோற்றத்தில் கவனம் ஈர்க்கும் பிரபாஸ்: ‘தி ராஜாசாப்’ போஸ்டர் வெளியீடு

வித்தியாசமான தோற்றத்தில் கவனம் ஈர்க்கும் பிரபாஸ்: ‘தி ராஜாசாப்’ போஸ்டர் வெளியீடு
Updated on
1 min read

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘தி ராஜாசாப்’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கல்கி 2898 ஏடி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் ‘தி ராஜாசாப்’. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை பீபுள் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹாரர் ரொமான்டிக் ஜானரில் இப்படம் உருவாகிறது.

இந்நிலையில் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வாயில் சுருட்டுடன், அரியாசனத்தில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார் பிரபாஸ். அவரின் வயதான தோற்றத்தை பிரதிபலிக்கும் சிகை அலங்காரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in