2கே தலைமுறையை ‘கவரும்’ சிம்பு: ஈர்க்கும் போஸ்டருடன் புதிய பட அறிவிப்பு!

2கே தலைமுறையை ‘கவரும்’ சிம்பு: ஈர்க்கும் போஸ்டருடன் புதிய பட அறிவிப்பு!

Published on

சென்னை: நடிகர் சிலம்பரசன் தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போஸ்டர் எப்படி? - முன்னதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்த சிம்பு, “தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணை தாண்டி வருவாயா, ஜென் ஸி மோட்” என தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே, கையில் கருப்பு ஒயரும், ‘தம்’ படத்தின் விரல் முத்திரையும், மற்றொரு கையில் கர்சீஃப் என 90’ஸ் கிட்ஸ்கள் பார்த்த சிம்பு தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் மீண்டும் திரும்பியிருக்கிறார். பளிச்சிடும் போஸ்டரும், சிம்புவின் தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ள சிம்பு, “கட்டம் கட்டி கட்றோம்” என பதிவிட்டுள்ளார்.

சிம்புவை பொறுத்தவரை அவர், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர்48’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் போஸ்டர் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. மேலும் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in