‘ப்ளடி பெக்கர்’ ட்ரெய்லர் எப்படி? - கவினின் தோற்றமும் சேட்டைகளும்!
சென்னை: கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் கவினின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? - அழுக்குப் படிந்த கிழிந்த உடை, நீண்டு கிடக்கும் தாடி, தலைமுடி, அதனை நியாயம் சேர்க்கும் நடிப்பில் கவர்கிறார் கவின். “காலங்காத்தால வேலைக்கு போறதுக்கு ரெடியாகுற மாதிரி பிச்சை எடுக்க ரெடியாகுறானுங்க” என்ற வசனத்துக்கு ஏற்பட ரெடியாகி, சேட்டைகள் செய்கிறார் கவின்.
திடீரென அவருக்கு ஒரு ஜாக்பாட் அடிக்கிறது. பணக்கார வீட்டில் சென்று நடிக்க வேண்டும். அதற்காக மீண்டும் ஒரு கெட்டப் மாற்றம். அந்த வீட்டில் நடக்கும் கலகலப்பான த்ரில்லிங் அனுபவம் தான் படமாக இருக்கும் என்பதை மொத்த ட்ரெய்லரும் உரித்து காட்டுகிறது. நெல்சனின் உதவி இயக்குநர் அவரைப் போன்ற ஒரு ஜாலியான கிட்டத்தட்ட ‘டாக்டர்’ படத்தையொட்டிய கதைக்களத்தை உருவாக்கியிருப்பார் எனத் தெரிகிறது. படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
ப்ளடி பெக்கர்: அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். கவின், மாருதி பிரகாஷ், கவின், ரெடின் கிங்ஸ்லி, சுனில் சுகதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்லர் வீடியோ:
