அடர் வனப்பகுதிகளில் படமான ‘அலங்கு’

அடர் வனப்பகுதிகளில் படமான ‘அலங்கு’
Updated on
1 min read

‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் அடுத்து இயக்கும் படம், ‘அலங்கு’. இதில் நாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. எஸ்.பாண்டிகுமார்ஒளிப்பதிவு செய்துள்ளஇந்தப் படத்துக்கு அஜீஷ் இசை அமைக்கிறார். டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ்புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ், எஸ்.ஏ.சங்கமித்ரா தயாரிக்கின்றனர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. அதன் தொடர்ச்சியாக நடைபெறும்சம்பவங்கள்தான் இதன் திரைக்கதை. படத்தின் 95 சதவிகித காட்சிகளை அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். முற்றிலும் மாறுபட்ட திரை அனுபவத்தை இந்தப்படம் தரும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in