

விஜய்யை வைத்து ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ படங்களை இயக்கிய பேரரசுவிடம் தனக்காக ஒரு கதையை தயார் செய்ய கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.
விஜய் வளர்ந்து வரும் நிலையில் அவருக்கு திருப்புமுனையாகவும், கமர்ஷியல் வரவேற்பை பெற்ற படங்களில் முக்கிய படங்களாகவும் ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய இரண்டு படங்களும் அமைந்ததால் அந்த இயக்குநருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் எண்ணத்துடன் நடிகர் விஜய் தற்போது பேரரசுவிடம் கதை எழுத சொல்லியிருக்கிறார். தற்போது முழு வேகத்துடன் கதை, திரைக்கதை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ளார், பேரரசு.