நிஜ சம்பவங்களின் பின்னணியில் யாத்ரீகன்

நிஜ சம்பவங்களின் பின்னணியில் யாத்ரீகன்
Updated on
1 min read

நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சில குற்றச் சம்பவங்களின் பின்னணியில், எமோஷனல் கிரைம் த்ரில்லராக ‘யாத்ரீகன்’ என்ற படம் உருவாகிறது.

இதில் தர்ஷன், மாளவிகா, காளி வெங்கட், பானு உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் தயாரிக்கிறார். படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் கூறும்போது, “இரண்டு வெவ்வேறு நபர்கள் மற்றும் அவர்களின் வெவ்வேறு சித்தாந்தங்களைப் பற்றிய படம் இது.

ஒரு மர்மமான நிகழ்வு அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு இணைக்கிறது என்பது படத்தின் மையக்கரு. சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருக்கும். முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in