

‘பீச்சாங்கை’ ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஆர்யமாலா’.
மனிஷா ஜித் நாயகி. வடலூர் சுதா ராஜலட்சுமி மற்றும் ஜேம்ஸ் யுவன் தயாரித்துள்ளனர். தெருக்கூத்துக் கலையை மையப்படுத்திய காதல் கதையை கொண்ட இந்தப் படம் 1980-களின் பின்னணியில் உருவாகியுள்ளது.
வரும் 18-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி ஆர்.எஸ்.கார்த்தி கூறும் போது, “காத்தவராயன் வேஷம் போடும் தெருக்கூத்துக் கலைஞனாக நடித்துள்ளேன். படத்தின் இடைவேளைக்கு பிறகுதான் வருவேன். முதல் பாதி முழுவதும் கதாநாயகியை சுற்றியே கதை நிகழும். இந்தப் படத்துக்காகத் தெருக்கூத்து கலைஞர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன்” என்றார்.