அக்.18-ல் வெளியாகிறது ஸ்னேக்ஸ் அண்ட் லாடர்ஸ் வெப் தொடர்
தமிழ் த்ரில்லர் வெப்தொடரான ‘ஸ்னேக்ஸ் அண்ட் லாடர்ஸ்’, பிரைம் வீடியோவில் வரும் 18-ம் தேதி வெளியாகிறது. கல்யாண் சுப்ரமணியன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தொகுத்துள்ள இந்த வெப்தொடரை அசோக் வீரப்பன், பரத் முரளீதரன், கமலா அல்கெமிஸ் இயக்கியுள்ளனர். இந்த டார்க் காமெடி த்ரில்லரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
மர்மங்கள் மற்றும் சூழ்ச்சிகள் நிறைந்த 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. கடந்த 20 வருடத்துக்கு முன் நடைபெறுவது போல இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவால் புதிரான சூழலில் சிக்கி, அதிலிருந்து விடுபட போராடும் 4 பள்ளி நண்பர்களின் சாகசப் பயணத்தைப் பற்றி இத்தொடர் பேசுகிறது.
