

‘புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உட்பட பல படங்களில் நடித்தவர் ஹம்சவிர்தன். இவர் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'மகேஸ்வரா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை ரெட் டிராகன் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹம்சவிர்தன் தயாரிக்கிறார். 'ஹரா' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார்.
இதில், ராம்கி, கருடா ராம், பி.எல். தேனப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மோகன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்கான ஆக்ஷன் காட்சி, சமீபத்தில் அரியலூர் நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்டது. பென்ஸ் கார் ஒன்றை நொறுக்குவது போன்ற அந்தக் காட்சியை, ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் படமாக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் ஹம்சவிர்தனுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் படப்பிடிப்பில் ஹம்சவிர்தன் பங்கேற்றார்