‘வேட்டையன்’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு - சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவு

‘வேட்டையன்’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு - சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

மதுரை: என்கவுன்டருக்கு ஆதரவான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், நடிகர் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

மதுரை உலகநேரியைச் சேர்ந்த பழனிவேலு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்த, ‘வேட்டையன்’ படத்துக்கான டீசர் கடந்த செப்டம்பர் 20-ல் வெளியானது. அதில் சட்டவிரோத என்கவுன்டரை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை உருவாக்கும் வகையிலான வசனம் இடம்பெற்றுள்ளது. இதனை நீக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது மியூட் செய்யவோ உத்தரவிட வேண்டும். அதுவரை ‘வேட்டையன்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘வேட்டையன்’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து, மனு குறித்து மத்திய சென்சார் போர்டு மற்றும் லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in