‘விஜய் 69’ படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

‘விஜய் 69’ படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு, ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. நேற்று (அக்டோபர் 1) முதல் படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.

இன்று படக்குழு வெளியிட்டுள்ள அப்டேட்டில் படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிய உள்ளார்கள். இந்தப் படத்தின் பூஜை அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. மறுநாள் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான அப்டேட்டுகள் வரும் நாட்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in