தனுஷ் தலைமையில் விஜய் சேதுபதி - நயன்தாரா புதிய கூட்டணி!

தனுஷ் தலைமையில் விஜய் சேதுபதி - நயன்தாரா புதிய கூட்டணி!
Updated on
1 min read

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'நானும் ரவுடி தான்' என்னும் படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதியிடம் "இங்குள்ள நடிகைகளில் 'சூது கவ்வும்' படத்தின் பின்னணி இசையில் யாரைக் கடத்த ஆசைப்படுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு அவர் எவ்வித யோசனையும் இல்லாமல் கூறிய பதில் "நயன்தாரா".

அதனைத் தொடர்ந்து "உங்களுக்கு நயன்தாராவை எந்தளவிற்கு பிடிக்கும்?" என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளிக்காமல், தனது வெட்கத்தையே பதிலாக்கினார். அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஹைலைட்டாக விஜய் சேதுபதியின் நிகழ்வு அமைந்தது.

தற்போது இருவரையும் ஒன்றாக இணைத்து படம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ். விஜய் சேதுபதியின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் தனுஷ் என்று இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.

அனிருத்தை நாயகனாக்கி விக்னேஷ் சிவன் இயக்க திட்டமிட்ட 'நானும் ரவுடி தான்' படத்தில் அனிருத்திற்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'நானும் ரவுடி தான்' படக்குழுவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் தனுஷ்.

விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதற்கு, கொக்கி குமார் தயாரிக்க சுமார் மூஞ்சு குமாரு நடிக்கிறார் என்ற ரசிகர்கள் கூறிய கருத்தை தனுஷ் ரி-ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in