சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட சாய் பல்லவி கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட சாய் பல்லவி கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு
Updated on
1 min read

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

அறிமுக வீடியோ எப்படி?: தொடக்கத்திலேயே ஜனவரி 26, 2015 என்ற குடியரசு தின விழா நிகழ்வின் காட்சிகள் காட்டப்படுகின்றன. பிரதமர் மோடி, ஒபாமா அமர்ந்துள்ள வீடியோவில், மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் காட்சிப்படுத்தப்படுகிறார். அந்த உண்மையான காட்சி மாறி சாய் பல்லவியின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேஜர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தில் அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரெபேக்காவாக நடிக்கிறார் சாய் பல்லவி. மிகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார். இறுதியில், “கடலுக்கும், ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம் எனக்கும் அவனுக்கும்” என்ற வசனத்துடன் வீடியோ நிறைவடைகிறது.

அமரன்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எம்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ், புவான் அரோரா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த, வீரமரணமடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையை கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. காஷ்மீரில் இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம்.அக்.31-ம் தேதி படம் வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in