அடுத்த ஆண்டு ‘கைதி 2’ படத்தின் பணிகள் தொடங்கும்: கார்த்தி உறுதி

அடுத்த ஆண்டு ‘கைதி 2’ படத்தின் பணிகள் தொடங்கும்: கார்த்தி உறுதி
Updated on
1 min read

அடுத்த ஆண்டு ‘கைதி 2’ உருவாகும் என நடிகர் கார்த்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று (செப்.23) ஹைதராபாத்தில் ‘மெய்யழகன்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சத்யம் சுந்தரம்’ விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இதில் ‘மெய்யழகன்’ படம் உருவான விதம், சூர்யா என்ன சொன்னார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேசினார் கார்த்தி.

மேலும், ரசிகர்கள் பலரும் ‘கங்குவா’ என்று கத்தினார்கள். அதற்கு நவம்பர் 14-ம் தேதி ‘கங்குவா’ வெளியாக இருப்பதாக குறிப்பிட்டார் கார்த்தி. மேலும், ‘கைதி 2’ அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் ரசிகர்களிடம் தெரிவித்தார்.

தற்போது ‘சர்தார் 2’ படத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அதனை முடித்துவிட்டு தமிழ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ‘கைதி 2’-வில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

கடந்த 2019-ல் கைதி படத்தின் முதல் பாகம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ‘டில்லி’ எனும் பாத்திரத்தில் கார்த்தி நடித்திருப்பார். விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in