காம்தார் நகர் வீதிக்கு எஸ்.பி.பி. பெயர்: முதல்வருக்கு சரண் கோரிக்கை

காம்தார் நகர் வீதிக்கு எஸ்.பி.பி. பெயர்: முதல்வருக்கு சரண் கோரிக்கை
Updated on
1 min read

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர், கடந்த 2020-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் அவர் கடைசிவரை வசித்து வந்த, சென்னை, காம்தார் நகர் பகுதிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் அல்லது வீதி என்று பெயர் வைக்கக் கோரி அவர் மகன் எஸ்.பி.பி.சரண் முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அதில், “எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் இறுதி மூச்சுவரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீதி’ அல்லது நகர் என பெயர் மாற்றம் செய்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும் வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் பார்வைக்குக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in